ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் வெற்றி.! அடித்து நொறுக்கி அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய அணி.!

INDvNEP

கடந்த செப்டம்பர் 23ம் தேதி கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக 19 வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோவ் நகரில் தொடங்கியது. அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த ஆசிய விளையாட்டு போட்டித் தொடக்கி இன்றோடு 10 நாட்கள் ஆகிவிட்டது. இதில் இந்தியா பல போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை குவித்து வருகிறது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான டி20ஐ முதல் காலிறுதி போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதன்படி, பிங்ஃபெங் கேம்பஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் நேபால் அணிகள் மோதியது.

இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. ஜெய்ஸ்வால் மற்றும் கெய்க்வாட் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கின.ர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் கெய்க்வாட் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார், இதன் பிறகு திலக் வர்மா களமிறங்கி 2 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

அவரைத்தொடர்ந்து, வந்த ஜிதேஷ் சர்மாவும் லபக்சன் வீசிய பந்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். ஆனால் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் சதம் அடித்து விலாசினார். இருந்தும் அவரும் ஆட்டமிழக்க சிவம் துபே மற்றும் ரிங்கு சிங் விளையாடினார் இறுதியில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 202 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு களமிறங்கிய நேபாள அணி தொடக்கத்தில் ஓரளவு நன்றாகவே விளையாடியது. இருந்தும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து வந்தது. இறுதியில் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

இந்த போட்டியில் இந்தியா சார்பாக அவேஷ் கான், ரவி பிஷ்னாய் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் வென்றதன் மூலம் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. இந்த வெற்றி ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் வெற்றியாகும். மேலும், இதுவரை ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 13 தங்கம், 24 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தமாக 61 பதக்கங்களை வென்று, பதக்கபட்டியலில்  4வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்