இந்தியாவில் சுற்று பயணம் செய்து பங்களாதேஷ் அணி டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.நேற்று முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் இறங்கிய பங்களாதேஷ் 150 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.இதில் அதிகபட்சமாக கேப்டன் மோமினுல் ஹக் 37 , முஷ்பிகுர் ரஹீம் 43 ரன்கள் எடுத்தனர்.
இதை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மாயங்க் அகர்வால் ,ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர்.ஆனால் ரோஹித் வெளியேறினார்.பின்னர் புஜாரா களமிறங்க இருவரும் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
நேற்றைய ஆட்டமுடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 86 ரன்கள் எடுத்து உள்ளது.களத்தில் புஜாரா 43 , மாயங்க் அகர்வால் 37 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.இதை தொடர்ந்து இன்று இந்திய அணி இரண்டாம்நாள் ஆட்டம் தொடங்கியது.
சிறப்பாக விளையாடி வந்த புஜாரா அரைசதம் அடித்து 54 ரன்னில் வெளியேறினர்.பின்னர் இறங்கிய கேப்டன் கோலி ரன் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.இந்நிலையில் தொடங்க வீரராக களமிங்கிய மாயங்க் அகர்வாலின் நிதனமான ஆட்டத்தால் 186 பந்தில் 101 ரன்கள் எடுத்து சதம் அடித்து உள்ளார்.
இந்திய அணி 3 விக்கெட்டை பறிகொடுத்து 213 ரன்கள் அடித்து 63 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…
அமெரிக்கா : அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு…