முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 150 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இதில் முகமது ஷமி 3 விக்கெட்டை பறித்தார். பின்னர் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரராக களமிங்கிய மாயங்க் அகர்வால் இரட்டைசதம் விளாசி 243 ரன்கள் குவித்தார்.இதை தொடர்ந்து இறங்கிய புஜாரா ,ரஹானே , ஜடேஜா ஆகியோர் அரைசதம் விளாசினார்.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 6 விக்கெட்டை இழந்து 493 ரன்கள் எடுத்து இருந்தது.களத்தில் ஜடேஜா 60 ,உமேஷ் யாதவ் 25 ரன்களுடன் இருந்தனர்.இந்நிலையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய போது இந்திய அணி கேப்டன் கோலி டிக்ளேர் அறிவித்தார்.பங்களாதேஷ் அணி வீரர் அபு ஜெயத் 4 விக்கெட்டை பறித்தார்.
இதை அடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சை போல ஆட்டம் தொடக்கத்திலே விக்கெட்டை பறிகொடுத்து திணறி வருகிறது. பங்களாதேஷ் 22 ஓவர் முடிவில் 60 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டை இழந்து உள்ளது.
இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் , முகமது ஷமி 2 விக்கெட்டையும் பறித்தனர்.
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…