முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இப்போட்டியில் முதலில் இறங்கிய பங்களாதேஷ் அணி 150 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டையும் , முகமது ஷமி 3 விக்கெட்டையும் வீழ்த்தினார். இப்போட்டியில் அஸ்வின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்து உள்ளார்.
இந்நிலையில் சொந்த மண்ணில் அனில் கும்ப்ளே 250 விக்கெட்டுகளை 43 போட்டிகளில் வீழ்த்தினார்.ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் 42 போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்து உள்ளார்.
சொந்த மண்ணில் 250 விக்கெட்டை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார். அனில் கும்ப்ளே (350), ஹர்பஜன் சிங் (265) விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…
குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…