INDvsWI:முதலில் களமிறங்கும் இந்திய அணி.! வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா. ?இந்திய அணி.!
- இன்று இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
- டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்ட் பந்து வீச முடிவு செய்து உள்ளார்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்ட் பந்து வீச முடிவு செய்து உள்ளார்.
இந்திய அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன் ), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர் ), கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், முகமது ஷமி, ஷார்துல் தாகூர், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:
ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், சிம்ரான் ஹெட்மியர், நிக்கோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், கீரோன் பொல்லார்ட் (கேப்டன் ), ஜேசன் ஹோல்டர், கீமோ பால், அல்சாரி ஜோசப், ஷெல்டன் கோட்ரெல், கேரி பியர் ஆகியோர் இடம்பெற்றனர்.
முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிவெற்றி பெற்றது. இந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தால் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றி விடும்.