அல்-நஸ்ர் அணிக்காக முதல் போட்டி! உற்சாகத்தில் ரொனால்டோ.!
கிறிஸ்டியானோ ரொனால்டோ, அல்-நஸ்ருக்காக தான் விளையாடிய முதல் போட்டியின் படங்களைப் பகிர்ந்துள்ளார்.
சவுதி அரேபிய கிளப் அணியான அல்-நஸ்ரில் 2025ஆம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, அல்-நஸ்ரில் தனது அறிமுக போட்டியின் படங்களை வெளியிட்டுள்ளார். சவுதி புரோ லீக்கில், அல்-நஸ்ர் கிளப் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் எட்டிஃபாக் எஃப்சியை தோற்கடித்தது.
பிரேசிலிய கால்பந்து வீரர் தலிஸ்கா, அல்-நஸ்ருக்காக ஒரே கோல் அடித்தாலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரொனால்டோ இந்த போட்டியில் கோல் ஏதும் அடிக்கவில்லை. ரொனால்டோ தனது இன்ஸ்டாவில், முதல் ஆட்டம், முதல் வெற்றி – நன்றாக முடிந்தது நண்பர்களே… உங்களது நம்பமுடியாத ஆதரவிற்கும், அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என ரொனால்டோ பதிவிட்டுள்ளார்.
Some skill show ???????? pic.twitter.com/PW4dGG54XN
— AlNassr FC (@AlNassrFC_EN) January 22, 2023