அடுத்த வருடம் 8-வது ஐபிஎல் அணியில் விளையாட உள்ள பிஞ்ச்.!
- ஐபிஎல் ஏலத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஆரோன் பிஞ்ச்சை ரூ.4.40 கோடிக்கு எடுத்தனர்.
- ஆரோன் பிஞ்ச் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அவர் விளையாடப்போவது இது 8-வது அணிஆகும்.
இந்தியாவின் உள்ளூர் போட்டியான ஐபிஎல் தொடர் வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அனைத்து அணியினரும் போட்டி போட்டு வீரர்களை ஏலம் எடுத்தனர்.
அதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் ஒரு நாள் போட்டியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச்சை ரூ.4.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தனர். ஆரோன் பிஞ்ச் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அவர் விளையாடப்போவது இது 8-வது அணிஆகும்.
ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், குஜராத் லயன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் , புனே வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஆகிய அணிகளுக்காக விளையாடி உள்ளார். இதில் புனே, குஜராத் அணிகள் ஐ.பி.எல் தொடரில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.
ஐ.பி.எல் தொடரில் அதிக அணிகளுக்காக விளையாடிய வீரர் என்ற சிறப்பை பிஞ்ச் பெற்று உள்ளார்.