2023ம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே ஒருநாள் தொடரின் அரை இறுதிப் போட்டியில் கர்நாடகா – ராஜஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அபினவ் மனோகர் 91, மனோஜ் பாண்டாகே 63 ரன்கள் குவித்தனர்.
இதையடுத்து 283 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியை கொடுத்தது. இந்த சூழலில், நான்காம் வரிசையில் களமிறங்கிய கேப்டன் தீபக் ஹூடா, கரன் லம்பாவுடன் இணைந்த அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்தியாவில் டி20 தொடரை தொடர்ந்து T10 தொடரை அறிமுகப்படுத்த பிசிசிஐ திட்டம்?
அதன்படி, 19 பவுண்டரிகள், 5 சிக்ஸ் அடித்து தெறிக்கவிட்ட அவர் 128 பந்துகளில் 180 ரன்கள் குவித்தார். இதனால், கர்நாடகாவின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறவிட்டார். பின்னர் அதிரடியாக விளையாடி வந்த தீபக் ஹூடா, அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில் 44வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும், மறுபக்கம் நிதானமாக விளையாடி வந்த லம்பா அதே ஓவரில் வெற்றியை உறுதி செய்தார். இதனால் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. குறிப்பாக, இந்த வெற்றி தீபக் ஹூடாவின் அதிரடியால் நிகழ்ந்தது. இதன்மூலம், ராஜஸ்தான் அணியின் கேப்டன் தீபக் ஹூடா அதிரடியால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் ஹசாரே இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் முன்னேறியது.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…