#Finalissima:வீழ்ந்தது இத்தாலி;சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா!
தென் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சாம்பியன் அணிகளுக்கு இடையே கடந்த சில வருடங்களாக ஃபைனலிசிமா(கிராண்ட் ஃபைனல்) கோப்பைக்கான கால்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘ஃபைனலிசிமா’ கால்பந்து இறுதிப் போட்டியானது அர்ஜென்டினா-இத்தாலி அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அதன்படி,ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் லாடரோவும் மற்றும் 45-வது நிமிடத்தில் ஏஞ்சல் டி மரியாவும்,94-வது நிமிடத்தில் பவ்லோ டைபலாவும் கோல் அடித்து அசத்தினர்.இதனால,இப்போட்டியில்,அர்ஜென்டினா அணியானது 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.மேலும்,கோல் அடிக்க உதவிய லியோனல் மெஸ்ஸி இப்போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
???? #Finalissima
???? La secuencia que querés guardar en tu celu ???? pic.twitter.com/pXlu3hwcpP
— Selección Argentina ???????? (@Argentina) June 1, 2022
இதற்கு முன்னதாக ‘ஃபைனலிசிமா’ கிராண்ட் பைனலில் அர்ஜென்டினாவுக்காக சாம்பியன்ஸ் கோப்பையை வென்றவர் மறைந்த கால்பந்து ஜாம்பவான் டீகோ மரடோனா என்பது குறிப்பிடத்தக்கது.