FIH Pro League 2024 : அயர்லாந்தை 4-0 என்ற கணக்கில் பந்தாடி இந்திய அணி அபார வெற்றி ..!

FIH ப்ரோ லீக் 2024 (FIH Pro League 2024) ஹாக்கி தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வெற்றி பெரும் அணிகள் ஹாக்கி உலகக்கோப்பை மற்றும் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியிலும் கலந்து கொள்வர், அதனால் அதற்கான நுழைவு தொடராகவும் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது.

Read More : – #INDvsENG : கில்-ஜுரேல் நிதானத்தால் இந்திய அணி வெற்றி ..! டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தல் ..!

இந்த தொடரில் நேற்று இரவு 7.30 மணிக்கு இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. இரண்டு அணிகளுக்கும் இடையே 2019 முதல் தற்போது வரை, நடந்த 8 போட்டிகளிலும் 6 முறை இந்திய அணியும், 1 முறை அயர்லாந்து அணியும், 1 போட்டி ட்ராவிலும் முடிந்துள்ளது.

இப்படி ஒரு வலுவான இந்திய அணியை நேற்று அயர்லாந்து அணி மீண்டும் எதிர்கொண்டது. நேற்று நடந்த இந்த போட்டியின் முதல் கால் (15 நிமிடம்) பகுதியிலேயே இந்திய அணி அபாரமாக இரண்டு கோலை அடித்து அசத்தினர். அதன் பின் இரண்டாவது காலில் இரண்டு அணிகளும் கோல் அடிக்காமல் இருந்தனர். பின் மூன்றாவது மட்டும் நான்காவது கால் பகுதியில் இந்திய அணி இரண்டு கோலை அடித்தனர்.

Read More : – #LaLiga 2024 : லூகா மோட்ரிச் அதிரடியால் ரியல் மாட்ரிட் அணி வெற்றி ..!

நீலகண்ட சர்மா 14-வது நிமிடத்திலும், ஆகாஷ்தீப் சிங் 15-வது நிமிடத்திலும், குர்ஜந்த் சிங் 38-வது நிமிடத்திலும், ஜுக்ராஜ் சிங் 60-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதனால் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்