#FIFAWWCFinal: கோப்பையை வெல்லப்போவது யார்.? இன்று இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் பலப்பரீச்சை..!
விறுவிறுப்பாக நடந்து வரும், 9 வது ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, கடைசியாக நடந்த இரண்டு அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்று, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறியது.
அதேபோல, போட்டியின் மூன்றாவது வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கும் போட்டியானது நேற்று நடைபெற்றது. இதில், இரண்டு அரையிறுதி போட்டிகளில் தோல்வியை சந்தித்த ஸ்வீடன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதியது. அதில் ஸ்வீடன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை போட்டியில் 3வது இடத்தை பிடித்தது.
இந்நிலையில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி, இன்று ஆகஸ்ட் 20ம் தேதி மதியம் 3.30 மணிக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அக்கார் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெரும் அணி 2023ம் ஆண்டு ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பையை வெல்லும். இந்த இரு அணிகளும் இதுவரை கோப்பையை வென்றது இல்லை.
எனவே, இதில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இரு அணி வீராங்கனைகளுக்கு விளையாடுவார்கள். இந்த இரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 7 முறை இங்கிலாந்து அணியும், 3 முறை ஸ்பெயின் அணியும் வெற்றி பெற்றுள்ளது. மற்ற 6 போட்டிகளும் டிராவில் முடிவடைந்துள்ளன.
எப்படி பார்க்கலாம் ?
FIFA மகளிர் உலகக் கோப்பை 2023 போட்டிகள் இந்தியாவில் டிடி ஸ்போர்ட்ஸ் டிவி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.FanCode ஆப்ஸில் கட்டணம் செலுத்தியும் ,YouTube TVயில் சந்தா மட்டுமே சேவையாக இருந்தாலும் இலவச சோதனையில் போட்டியை கண்டுகளிக்கலாம்
.