#FIFAWorldCup: பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி! 8வது முறையாக காலிறுதிக்கு முன்னேற்றம்!
பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை தோற்கடித்து 8வது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது.
ஃபிஃபா உலகக் கோப்பை 2022 தொடரின் 16வது சுற்றில் நேற்று நடைபெற்ற போட்டியில், ஐந்து முறை சாம்பியனான பிரேசில் அணி தோஹாவில் உள்ள ஸ்டேடியம் 974-இல் நடந்த 16-வது சுற்று ஆட்டத்தில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, 8வது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது.
பிரேசிலுக்காக வினிசியஸ் ஜூனியர், நெய்மர், ரிச்சர்லிசன் மற்றும் லூகாஸ் பக்வெட்டா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர். முதல் பாதியில் தென் கொரியாவுக்கு எதிராக பிரேசில் நான்கு கோல்களை அடித்து 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வரலாதரை எழுதியுள்ளது.
இது 1954 ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக FIFA உலகக் கோப்பை போட்டியின் முதல் பாதியில் பிரேசில் நான்கு கோல்களை அடித்தது இதுவே முதல் முறையாகும். மேலும், கடந்த மூன்று ஃபிஃபா உலகக் கோப்பைகளில் தலா ஒரு கோல் அடித்த ஒரே வீரர்களாக லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, செர்டன் ஷாகிரி மற்றும் இவான் பெரிசிச் ஆகியோருடன் நெய்மர்-யும் இணைந்துள்ளார்.