ஃபிஃபா உலகக்கோப்பையில் முதல் அரையிறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதுகின்றன.
கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. 32 அணிகளுடன் தொடங்கிய இந்த உலகக்கோப்பை தொடர் தற்போது 4 அணிகளுடன் அரையிறுதி போட்டியை நெருங்கியுள்ளது.
இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் லுஸைல் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. அர்ஜென்டினா மற்றும் குரோஷியா இரு அணிகளும் தங்களது காலிறுதியில் பெனால்டி முறையில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸிக்கு இந்த உலகக்கோப்பை தொடர் கடைசி தொடராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் இன்றைய போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு செல்லும் முனைப்பில் அர்ஜென்டினாவும் அதன் ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் குரோஷியா அணி 2018 ஆம் ஆண்டு உலககோப்பையின் இறுதிப்போட்டி வரை வந்து தோல்வியடைந்தது, அர்ஜென்டினா அணியை அடுத்து வலிமையான நடுகள வீரர்களைக் கொண்டுள்ள குரோஷியாவும், முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு செல்லும் முனைப்பில் களமிறங்கும்.
எப்படியிருந்தாலும் கால்பந்து ரசிகரிகளுக்கு இன்றைய போட்டி ஒரு விருந்தாக அமையுமென்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. மெஸ்ஸி இன்றைய போட்டியில் அர்ஜென்டினா அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து செல்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் பார்ப்பதற்கு காத்திருக்கின்றனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…