FIFA WorldCup2022: உலகக் கோப்பையில் குரூப் ஸ்டேஜ் போட்டிகளிலிருந்து நெய்மர் விலகல்.!

ஃபிஃபா உலகக் கோப்பையில் மீதமுள்ள குரூப் சுற்று ஆட்டங்களில் இருந்து பிரேசில் அணியின் நெய்மர் விலகியுள்ளார்.
கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா உலகக் கோப்பை தொடரின் மீதமுள்ள குரூப் சுற்று ஆட்டங்களில் இருந்து கணுக்கால் காயம் காரணமாக பிரேசிலின் நெய்மர் விலகியுள்ளார். ஃபிஃபா உலகக் கோப்பை 2022 இல் பிரேசில் அணி, தனது தொடக்க ஆட்டத்தில் செர்பியாவுக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கத்தாரின் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியின் போது நெய்மர், கணுக்காலில் காயமடைந்தார், இந்த காயம் காரணமாக மீதமுள்ள குரூப் சுற்று ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார். இருப்பினும், நாக் அவுட் போட்டிகளுக்கு முன் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேசில் பயிற்சியாளர் டைட் போட்டிக்குப் பிறகு இது குறித்து பேசும்போது, நவம்பர் 28 ஆம் தேதி சுவிட்சர்லாந்திற்கு எதிரான போட்டியிலும், டிசம்பர் 3 ஆம் தேதி கேமரூனுக்கு எதிரான போட்டியிலும் நெய்மர் விளையாடமாட்டார், ஆனால் டிசம்பர் 3 முதல் தொடங்கும் நாக் அவுட் போட்டிகளுக்கான அணியில் மீண்டும் இடம் பெறுவார் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024
ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!
December 19, 2024