FIFA WorldCup2022: வரலாறு படைத்த மொரோக்கோ! ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற்றம்.!
ஃபிஃபா உலகக் கோப்பையில் மொரோக்கோ அணி, முதன்முறையாக கால் இறுதிக்கு தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது.
ஃபிஃபா உலகக் கோப்பை ஆட்டத்தில் மொரோக்கோ அணி 3-0 என்ற கோல்கணக்கில் வலிமை வாய்ந்த ஸ்பெயின் அணியை வீழ்த்தி, கால்பந்து உலக கோப்பையின் வரலாற்றில் முதன்முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரின், 16 அணிகள் மோதும் சுற்று ஆட்டத்தில் நேற்று இரவு 8:30 மணிக்கு மொரோக்கோ மற்றும் ஸ்பெயின் அணிகள் எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோலின்றி சமநிலையில் முடிந்தன.
இரண்டாவது பாதியிலும் 90 நிமிடங்கள் வரை இரு அணிகளும் ஒரு கோலும் அடிக்க முடியவில்லை. மேலும் கூடுதலாக வழங்கப்பட்ட நிமிடங்களிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்டி முறை பின்பற்றப்பட்டது, இந்த பெனால்டி முறையில் ஸ்பெயின் அணியின் அப்துல் ஹமீத் சபீரி, ஹக்கீம் சைச், மற்றும் அச்சராப் ஹக்மி 122, 124 மற்றும் 127 வது நிமிடங்களில் கோலடித்து 3-0 என்று பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை வீழ்த்தியது.
இதன் மூலம் கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் மொரோக்கோ அணி முதன்முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும் ஸ்பெயின் அணி இந்த தோல்வியின் மூலம் கால்பந்து2022 உலக கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.