ஃபிஃபா உலகக்கோப்பையில் போலந்து அணியை வீழ்த்தி 5ஆவது முறையாக நாக் அவுட் சுற்றுக்கு அர்ஜென்டினா முன்னேறியுள்ளது.
கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை 2022 தொடரில் குரூப்-சியில் இடம் பெற்ற லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா மற்றும் போலந்து அணிகள் இன்று விளையாடியது. இந்த ஆட்டம் ஸ்டேடியம் 974இல் நள்ளிரவு 12:30 மணிக்கு தொடங்கியது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை, எனினும் அர்ஜென்டினா அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி தவற விட்டார். இதனால் கோலடிக்கும் வாய்ப்பை மெஸ்ஸி இழந்தார். ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கிய முதல் நிமிடத்திலேயே அர்ஜென்டினா அணி வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினா அணியை முன்னிலை பெறச் செய்தார்.
இதன் பிறகு 67 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி வீரர் ஜூலியன் அல்வரஸ் மேலும் ஒரு கோலை அடித்தார். இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா, போலந்து அணியை வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா அணி, குரூப் சி யில் ஆறு புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றான நாக் அவுட் சுற்றுக்கு ஐந்தாவது முறையாக முன்னேறி உள்ளது.
இதே பிரிவில் இடம் பெற்றுள்ள போலந்து அணியானது (4புள்ளிகள்) மெக்ஸிகோவை (4புள்ளிகள்) விட கோல் வித்யாசத்தில் முன்னிலையில் உள்ளதால், போலந்து அணியும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…