FIFA WorldCup2022: நான்கு முறை சாம்பியனான ஜெர்மனி, தொடரை விட்டு வெளியேறியது.!
ஃபிஃபா உலகக் கோப்பையில் இருந்து நான்கு முறை சாம்பியனான ஜெர்மனி அணி தொடரை விட்டு வெளியேறியுள்ளது.
கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் தகுதி சுற்று ஆட்டத்தில் இன்று குரூப் இ பிரிவிலுள்ள ஜெர்மனி மற்றும் கோஸ்டா ரிக்கா அணிகள் மோதின. அல்பெய்த் ஸ்டேடியத்தில் இன்று அதிகாலை 12:30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கியது
ஆட்டம் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் செர்ஜ் நப்ரி ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியின் முடிவில் ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கி சில நிமிடங்களில் 58 வது நிமிடத்தில் கோஸ்டா ரிக்கா அணியின் எல்ட்சின் டெஜடா ஒரு கோல் அடித்து 1-1 என்று சமநிலை பெறச் செய்தார்.
அதன்பிறகு 73 மற்றும் 85 வது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்காக ஹாவர்ட்ஸ் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்தார். ஆட்டத்தின் கடைசியில் 89 வது நிமிடத்தில் ஜெர்மனியின் நிக்கலஸ் ஃபுல்க்ருக் நான்காவது கோலை அடிக்க ஜெர்மனி 4-2 என்று கோஸ்டரிக்காவை வீழ்த்தியது.
இந்த போட்டியில் 4-2 என்று ஜெர்மனி அணி வெற்றி பெற்றிருந்தாலும், உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறது. நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணி, குரூப் இ பிரிவில் நான்கு புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக ஸ்பெயினும் நான்கு புள்ளிகளை பெற்று கோல் வித்தியாசத்தில் ஜெர்மனி அணியை விட முன்னிலையில் இருப்பதால் ஸ்பெயின் குரூப்-இ ல் இருந்து இரண்டாவது அணியாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி உள்ளது
இந்த நிலையில் குரூப்-இ வின் மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான், ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதால் குரூப்-இ பிரிவிலிருந்து ஜப்பான் அணி நாக்கவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.