FIFA WorldCup2022: நடப்பு சாம்பியன் பிரான்ஸின் முதல் தோல்வி.! அதிர்ச்சி வைத்தியம் அளித்த துனிசியா.

Default Image

ஃபிஃபா உலகக்கோப்பையில் துனிசியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்த நடப்பு சாம்பியன் பிரான்ஸ்.

கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் குரூப்-டி விலிருந்து பிரான்ஸ் மற்றும் துனிசியா அணிகள் எஜூகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் மோதின.

இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி, ஃபிஃபா கால்பந்து அணிகளின் தரவரிசையில் 30-வது இடம் வகிக்கும் துனிசியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் துனிசியா வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும் பிரான்ஸ் அணி நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே சென்று விட்டது. 2014 உலகக்கோப்பை தொடருக்கு பின் பிரான்ஸ் அணி அடைந்த முதல் தோல்வி இதுவாகும். குரூப்-டி விலிருந்து பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நாக் அவுட்டுக்கு முன்னேறியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்