ஃபிஃபா உலகக்கோப்பையில் நேற்று மொரோக்கோ விடம் பெல்ஜியம் அணி தோற்றதையடுத்து பெல்ஜியத்தின் தலைநகர் ப்ரஸ்ஸல்சில் கலவரம் வெடித்தது.
கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் குரூப்-F இல் இடம்பெற்ற பெல்ஜியம் மற்றும் மொரோக்கோ அணிகள் அல் துமாமா ஸ்டேடியத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி, மொரோக்கோவிடம் தோல்வியுற்றது.
இந்த தோல்வியை அடுத்து கால்பந்து ரசிகர்கள், பெல்ஜிய தலைநகர் பிரஸ்ஸல்ஸ் முழுவதும் பல இடங்களில் கலவரத்தை நடத்தினர். பிரஸ்ஸல்ஸில் கார் மற்றும் சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ வைத்து எரிக்கப்பட கலவரம் பெரிதாகியது.
இதனையடுத்து பெல்ஜிய போலீசார், தண்ணீர் அடித்தும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும் கலவரத்தை தடுத்து நிறுத்தி, கலவரக்காரர்களை அடக்கினர். கலவரத்திற்கு காரணமானவர்களை போலீசார் கைது செய்தனர்.
கலவரத்தில் நெடுஞ்சாலையில் தீ வைக்கப்பட்டது மேலும் பத்திரிகையாளர் ஒருவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டதையடுத்து, நீர் பீரங்கி மற்றும் கண்ணீர்ப்புகை பயன்படுத்தப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…