FIFA WorldCup2022: அரையிறுதிக்கு முன்னேறிய குரோசியா! 5 முறை சாம்பியன் பிரேசில் வெளியேறியது.!
ஃபிஃபா உலகக் கோப்பையில் முதல் காலிறுதியில் பிரேசிலை வீழ்த்தி குரோசியா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
கத்தாரில் நடந்து வரும் கால்பந்து உலக கோப்பை 2022 தொடரின் காலிறுதி போட்டிகள் நேற்று தொடங்கின. முதல் போட்டியில் பிரேசில் மற்றும் குரோசியா அணிகள் இரவு 8:30 மணிக்கு எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியத்தில் மோதின.
கோல் அடிப்பதற்கு இரு அணிகளும் கடுமையாக போராடின,இருந்தும் 90 நிமிடங்கள் முடியும் வரை இரு அணிகளும் கோல் இன்றி சமநிலையில் முடிந்தன.அதனால் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் நெய்மர் 106 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து பிரேசில்அணியை முன்னிலை பெறச் செய்தார்.
அதன் பின்னர் ஆட்டம் முடியும் சமயத்தில் 117 ஆவது நிமிடத்தில் குரோசியா அணியின் பெட்கோவிக் ஒரு கோல் அடித்து சமநிலை பெறச் செய்தார். கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்திலும் இரு அணிகளும் 1-1 என சம நிலையில் முடிந்ததால் பெனால்டி முறை பின்பற்றப்பட்டது.
இந்த பெனால்டி முறையில் குரோசியா அணியின் விலாசிக், மேஜர், மோட்ரிக், மற்றும் ஆர்சிக் என நான்கு வீரர்களும் ஒவ்வொரு கோல் எடுக்க, பிரேசில் அணிக்காக காஷ்மீரோ மற்றும் பெட்ரோ மட்டுமே கோல் அடிக்க முடிந்தது. இதனால் குரோசியா அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன பிரேசில் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
மேலும் பிரேசில் அணி கடந்த உலகக் கோப்பை தொடரிலும் கால் இறுதியில் இருந்து வெளியேற்றப்பட்டது. 1986 உலககோப்பை தொடருக்குப்பின் பிரேசில் அணி பெனால்டி முறையில் தோற்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது