ஃபிஃபா உலகக்கோப்பையில் இன்று வாழ்வா? சாவா? போட்டியில் அர்ஜென்டினா, மெக்ஸிகோவை சந்திக்கிறது.
கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் குரூப்-C வில் இடம்பெற்றுள்ள மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் மெக்ஸிகோ அணிகள் லுஸைல் ஸ்டேடியத்தில் விளையாடுகின்றன. அர்ஜென்டினா தனது முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது.
மெக்ஸிகோ அணி தனது முதல் போட்டியில் போலந்து அணியை சந்தித்தது. இதில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது. குரூப்-C வில் இன்னும் ஒரு புள்ளியும் பெறாமல் அர்ஜென்டினா அணி கடைசி இடத்திலும், ஒரு புள்ளியுடன் மெக்ஸிகோ 3ஆவது இடத்திலும் இருக்கிறது.
இன்றைய போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. ஆட்டம் நள்ளிரவில் 12.30 மணிக்கு தொடங்குகிறது. அர்ஜென்டினா அணியின் அட்டாக்கர் மார்ட்டினெஸ் கூறும்போது, இன்றைய போட்டி எங்களுக்கு பைனல்ஸ் போன்றது.
மேலும் இந்த உலகக்கோப்பையில் நாங்கள் தொடர்வது இன்றைய போட்டியின் முடிவில் தான் உள்ளது. நாங்கள் நிதானமாக இருக்கவேண்டும் அப்போது தான் மீண்டு வரமுடியும் என்று மார்ட்டினெஸ் கூறினார்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…