FIFA கால்பந்து உலகக்கோப்பை – இறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ் அணி
மொராக்கோவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி
கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. நேற்று நள்ளிரவு 12:30 மணிக்கு அல் பெய்த் ஸ்டேடியத்தில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதியது.
இதில், நடப்புச் சாம்பியனான பிரான்ஸ், 2-0 என்ற கோல்கணக்கில் முதல்முறையாக அரை இறுதிக்குள் நுழைந்த மொரோக்காவை தோற்கடித்து, இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்றது. இதனை தொடர்ந்து டிச.18-ஆம் தேதி பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெறவுள்ளது.