முதன்முறையாக,FIFA உலகக் கோப்பைக்கான கால்பந்து போட்டியை மூன்று வெவ்வேறு நாடுகள் நடத்துகின்றன.அதன்படி,2026 உலகக் கோப்பைக்கான போட்டிகள் 11 அமெரிக்க நகரங்களிலும், மெக்ஸிகோவில் உள்ள மூன்று ஹோஸ்ட் தளங்களிலும்,கனடாவில் இரண்டு இடங்களிலும் நடைபெறும் என்றும்,இதில் 48 அணிகள் பங்கேற்கின்றன எனவும் சர்வதேச கால்பந்து குழு (FIFA) அறிவித்துள்ளது.
அதன்படி,அட்லாண்டா,பாஸ்டன்,மெக்ஸிகோ சிட்டி, மியாமி, டல்லாஸ்,குவாடலஜாரா,ஹூஸ்டன்,சான் பிரான்சிஸ்கோ,கன்சாஸ் சிட்டி,லாஸ் ஏஞ்சல்ஸ்,மான்டேரி,நியூயார்க்/நியூ ஜெர்சி,பிலடெல்பியா, சியாட்டில்,டொராண்டோ மற்றும் வான்கூவர் என மொத்தம் 16 ஹோஸ்ட் நகரங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இது தொடர்பாக,FIFA தலைவர் கியானி இன்ஃபான்டினோ கூறுகையில்:”FIFA உலகக் கோப்பையை நடத்தும் 16 நகரங்களின் சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்திற்காக நாங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக,1994 ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா உலகக் கோப்பையை நடத்துவது இது இரண்டாவது முறையாகும்.மேலும் 1970 மற்றும் 1986 இல் இருமுறை உலகக் கோப்பை போட்டிகளை நடத்திய மெக்சிகோ தற்போது மூன்றாவது முறையாக நடத்தவுள்ளது.அதே சமயம்,கனடாவில் ஆண்கள் உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.ஆனால்,2015 ஆம் ஆண்டில் பெண்கள் உலகக் கோப்பையை கனடா நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…