FIFAWorldCup2026:3 நாடுகளில் உலகக் கோப்பை – FIFA அறிவிப்பு!

Default Image

முதன்முறையாக,FIFA உலகக் கோப்பைக்கான கால்பந்து போட்டியை  மூன்று வெவ்வேறு நாடுகள் நடத்துகின்றன.அதன்படி,2026 உலகக் கோப்பைக்கான போட்டிகள் 11 அமெரிக்க நகரங்களிலும், மெக்ஸிகோவில் உள்ள மூன்று ஹோஸ்ட் தளங்களிலும்,கனடாவில் இரண்டு இடங்களிலும் நடைபெறும் என்றும்,இதில் 48 அணிகள் பங்கேற்கின்றன எனவும் சர்வதேச கால்பந்து குழு (FIFA) அறிவித்துள்ளது.

அதன்படி,அட்லாண்டா,பாஸ்டன்,மெக்ஸிகோ சிட்டி, மியாமி, டல்லாஸ்,குவாடலஜாரா,ஹூஸ்டன்,சான் பிரான்சிஸ்கோ,கன்சாஸ் சிட்டி,லாஸ் ஏஞ்சல்ஸ்,மான்டேரி,நியூயார்க்/நியூ ஜெர்சி,பிலடெல்பியா,  சியாட்டில்,டொராண்டோ மற்றும் வான்கூவர் என மொத்தம் 16 ஹோஸ்ட் நகரங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இது தொடர்பாக,FIFA தலைவர் கியானி இன்ஃபான்டினோ கூறுகையில்:”FIFA உலகக் கோப்பையை நடத்தும் 16 நகரங்களின் சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்திற்காக நாங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக,1994 ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா உலகக் கோப்பையை நடத்துவது இது இரண்டாவது முறையாகும்.மேலும் 1970 மற்றும் 1986 இல் இருமுறை உலகக் கோப்பை போட்டிகளை நடத்திய மெக்சிகோ தற்போது மூன்றாவது முறையாக நடத்தவுள்ளது.அதே சமயம்,கனடாவில் ஆண்கள் உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.ஆனால்,2015 ஆம் ஆண்டில் பெண்கள் உலகக் கோப்பையை கனடா நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth