#FIFAWC2022:உலகக் கோப்பை கால்பந்து போட்டி-எந்த அணி,எந்த பிரிவில்? – இதோ விபரம்!

Default Image

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மோதும் அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்ட்டுள்ளன.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி வருகின்ற நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கத்தாரில் நடைபெறவுள்ளது. 32 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு இதுவரை 29 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

8 பிரிவுகள்:

இந்த நிலையில்,உலகக் கோப்பை கால்பந்து போட்டி லீக் சுற்றில் எந்த அணிகள்-யாருடன் மோதுவது என்பது குறித்து குலுக்கல் மூலம் (டிரா நிகழ்ச்சி) நேற்று முடிவு செய்யப்பட்டது.இந்த நிகழ்ச்சி சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் கத்தார் தலைநகர் தோகாவில் நேற்றிரவு நடைபெற்றது.அப்போது,உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மோதும் அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.அந்த வகையில்,

  • குரூப் ஏ: கத்தார்,ஈக்வடார்,நெதர்லாந்து,செனகல் அணிகள் இடம் பெற்றுள்ளன.
  • குரூப் பி: இங்கிலாந்து,ஈரான்,அமெரிக்கா, ஸ்காட்லாந்து,வேல்ஸ், உக்ரைன்.
  • குரூப் சி: அர்ஜென்டினா, சவுதி அரேபியா,மெக்சிகோ,போலந்து
  • குரூப் டி: பிரான்ஸ், யுஏஇ/ஆஸ்திரேலியா/பெரு, டென்மார்க், துனிசியா
  • குரூப் இ: ஸ்பெயின், கோஸ்டாரிகா/நியூசிலாந்து, ஜெர்மனி, ஜப்பான்
  • குரூப் எஃப்: பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா
  • குரூப் ஜி: பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்
  • குரூப் எச்: போர்ச்சுகல், கானா, உருகுவே, தென் கொரியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

மெஸ்ஸியின் அர்ஜென்டினா – ரொனால்டோவின் போர்ச்சுகல்:

குறிப்பாக,லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி கத்தாரில் நடைபெறும் FIFA உலகக் கோப்பை 2022-ல் தனது முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை எதிர்கொள்கிறது.

அதைப்போல,கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி,தனது முதல் போட்டியில் கானாவை எதிர்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்