2022 ஆம் ஆண்டு ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை, கத்தாரில் நவ-20 இல் தொடங்கி டிச-18 வரை நடக்கிறது.
உலகெங்கும் பெரும் ரசிகர்களைக் கொண்ட கால்பந்து விளையாட்டின், 22ஆவது ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை திருவிழா நவ-20 ஆம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. ஒவ்வொரு 4 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் இந்த உலகக்கோப்பை தொடர், அரபு நாடுகளில் முதன்முறையாக நடைபெறுகிறது என்பதால் ரசிகர்கள் பெறும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். மேலும் ஆசியாவில் நடைபெறும் இரண்டாவது கால்பந்து உலகக்கோப்பை தொடர், இதற்கு முன் 2002இல் தென்கொரியா மற்றும் ஜப்பானில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர், கத்தாரின் வெப்பம் காரணமாக இந்த வருடம் நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை வெறும் 29 நாட்கள் மட்டுமே நடைபெறுகிறது. இந்த தொடர் தான் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் 32 அணிகளுடன் பங்கேற்கும் கடைசி தொடராக இருக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றன.
அடுத்த கால்பந்து உலகக்கோப்பை தொடர், 2026 ஆம் ஆண்டு 48 அணிகளுடன் அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா நாடுகளில் நடைபெற இருக்கிறது. 32 அணிகளும் குரூப் A,B,C,D,E,F,G,H என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெறுகின்றன.
குரூப் சுற்று முடிவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 16 அணிகள் பங்கேற்கும் கட்டத்திற்கு முன்னேறும். லுசைல், அல் பேத், ஸ்டேடியம் 974, அல் துமாமா,கலீஃபா சர்வதேச அரங்கம், எஜுகேஷன் சிட்டி, அல் ஜனுப், அகமது பின் அலி ஸ்டேடியம் என மொத்தம் எட்டு மைதானங்களில் இந்த தொடர் நடைபெறுகிறது.
கடந்த முறை 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. குரோஷியா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்க போட்டியில் நவ-20 இல் கத்தார் மற்றும் ஈக்வடார் அணிகள் மோதுகின்றன. மொத்தம் 64 போட்டிகள் நடைபெறும் இந்த தொடரின் இறுதி போட்டி கத்தாரின் தேசிய தினமான டிச-18 ஆம் தேதி நடைபெறுகிறது.
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…