FIFA 2022: கத்தாரில் நவ-20 இல் தொடங்குகிறது, ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை திருவிழா.!

Default Image

2022 ஆம் ஆண்டு ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை, கத்தாரில் நவ-20  இல் தொடங்கி டிச-18 வரை நடக்கிறது.

உலகெங்கும் பெரும் ரசிகர்களைக் கொண்ட கால்பந்து விளையாட்டின், 22ஆவது ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை திருவிழா நவ-20 ஆம் தேதி  கத்தாரில் தொடங்குகிறது. ஒவ்வொரு 4 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் இந்த உலகக்கோப்பை தொடர், அரபு நாடுகளில் முதன்முறையாக நடைபெறுகிறது என்பதால் ரசிகர்கள் பெறும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். மேலும் ஆசியாவில் நடைபெறும் இரண்டாவது கால்பந்து உலகக்கோப்பை தொடர், இதற்கு முன் 2002இல் தென்கொரியா மற்றும் ஜப்பானில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர், கத்தாரின் வெப்பம் காரணமாக இந்த வருடம் நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை வெறும் 29 நாட்கள் மட்டுமே நடைபெறுகிறது. இந்த தொடர் தான் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் 32 அணிகளுடன் பங்கேற்கும் கடைசி தொடராக இருக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றன.

அடுத்த கால்பந்து உலகக்கோப்பை தொடர், 2026 ஆம் ஆண்டு 48 அணிகளுடன் அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா நாடுகளில் நடைபெற இருக்கிறது. 32 அணிகளும் குரூப் A,B,C,D,E,F,G,H என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெறுகின்றன.

  • குரூப் A – கத்தார், ஈக்வடார், செனெகல், நெதர்லாந்து
  • குரூப் B – இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்
  • குரூப் C – அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்ஸிகோ, போலந்து
  • குரூப் D – பிரான்ஸ், ஆஸ்திரேலியா,டென்மார்க், துனிசியா
  • குரூப் E – ஸ்பெயின், கோஸ்டா ரிக்கா, ஜெர்மனி, ஜப்பான்
  • குரூப் F – பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோயேசியா
  • குரூப் G – பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்
  • குரூப் H – போர்ச்சுக்கல், கானா, உருகுவே, தென் கொரியா

குரூப் சுற்று முடிவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 16 அணிகள் பங்கேற்கும் கட்டத்திற்கு முன்னேறும். லுசைல், அல் பேத், ஸ்டேடியம் 974, அல் துமாமா,கலீஃபா சர்வதேச அரங்கம், எஜுகேஷன் சிட்டி, அல் ஜனுப், அகமது பின் அலி ஸ்டேடியம் என மொத்தம் எட்டு மைதானங்களில் இந்த தொடர் நடைபெறுகிறது.

கடந்த முறை 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. குரோஷியா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்க போட்டியில் நவ-20 இல் கத்தார் மற்றும் ஈக்வடார் அணிகள் மோதுகின்றன. மொத்தம் 64 போட்டிகள் நடைபெறும் இந்த தொடரின் இறுதி போட்டி கத்தாரின் தேசிய தினமான டிச-18 ஆம் தேதி நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்