இன்றைய டி-20 போட்டியில் முகமூடி அணிந்து களமிறங்கும் வீரர்கள்
இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான முதல் டி -20 போட்டி இன்று டெல்லியில் வைத்து நடைபெறுகிறது.
டெல்லியில் சமீபகாலமாக காற்று மாசு அதிகரித்துள்ளது இதனால் டெல்லி வாழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் .இந்நிலையில் நேற்று பயிற்ச்சியில் ஈடுபட்ட வங்கதேச வீர்ரகளில் சிலர் முகமூடி அணிந்து பயிற்சி மேற்கொண்டனர் .இது டெல்லியில் நிலவும் காற்றின் தரத்தை காட்டுகிறது.
இதனிடையே இன்று நடைபெறும் டி-20 போட்டியில் வீரர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து களமிறங்குவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது .கடந்த 2017 ம் ஆண்டு இலகங்கைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .