#Tennis:பெடெரர் மற்றும் நடாலும் இறுதியாக இணையும் லேவர் கோப்பை தொடர்
ரோஜர் பெடெரர் தனது கடைசி தொடரான, லேவர் கோப்பை தொடரில் ரபேல் நடாலுடன் இணைந்து விளையாடுவது குறித்து ஒரு கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
வெள்ளிகிழமை லண்டனில் தொடங்கவுள்ள, லேவர் கோப்பை தொடருடன் ஓய்வு பெறப்போவதாக ரோஜர் பெடெரர் கடந்த வரம் அறிவித்திருந்தார். 2021 இல் விம்பிள்டன் காலிறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பிறகு ஃபெடரர் பெரிய அளவில் டென்னிஸ் போட்டி ஏதும் விளையாடவில்லை.
லேவர் கோப்பை தொடரில் ஒற்றையர் பிரிவில் விளையாடுவதை விட இரட்டையர் பிரிவில் விளையாடுவதாகவும், மேலும் இரட்டையர் பிரிவில் நடாலுடன் இணைந்து விளையாட விரும்புவதாகவும் பெடெரர் தெரிவித்தார். தான் ரபேல் நடாலுடன் இணைந்து விளையாடுவது, தன்னுடைய கனவாக இருக்கும் என்றும் பெடெரர் கூறியுள்ளார்.
பெடெரரும், நடாலும் இதுவரை 40 முறை ஒருவரையொருவர் எதிர்த்து விளையாடியுள்ளனர். பெடெரர் தனது இறுதித்தொடரில் நடாலுடன் இணைந்து விளையாடுவதைப் பார்க்க டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.