இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சமீபகாலமாக தன்னுடைய அணிக்காக பல சாதனைகளை படைத்து வருகிறார். உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 84 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
அதேபோல ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்டிலும் 135 ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவதற்கு மிகவும் உதவியாக இருந்தார். இதன் காரணமாக சமீபத்தில் இங்கிலாந்தின் நாயகன் என்ற விருது கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் தந்தை கெட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமாக வருவதால் பென் ஸ்டோக்ஸ் பயிற்சியிலிருந்து விலகியதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் செய்தி வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்ட செய்தியில் , பென் ஸ்டோக்ஸின் தந்தை கெட் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு திங்கள் கிழமை ஜோகன்னஸ்பர்க்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார்.
இதனால் இன்று பிற்பகல் சூப்பர்ஸ்போர்ட் பூங்காவில் இங்கிலாந்து அணி பங்கேற்கும் பயிற்சியில் பென் ஸ்டோக்ஸ் கலந்து கொள்ள மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியது. தற்போது இங்கிலாந்து அணி தென்னாபிரிக்காவில் சுற்று பயணம் செய்து நாளை முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…