தனது 13 வயது மகளை ரூ .7 லட்சத்திற்கு விற்ற தந்தை..! 4 மாத கர்ப்பிணியாக மீட்பு..!
ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் ஒருவர் தனது 13 வயது மகளை ரூ .7 லட்சத்திற்கு விற்றதாக ஹைதராபாத்தில் சிறுமியை மீட்கப்பட்ட பின்னர் போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில் , கடந்த ஜூன் 30 -ம் தேதி சிறுமியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.அதில், ஜூன் 22-ம் தேதி அன்று கோபா ராம் மாலி என தெரிந்த இடைத்தரகர் ஒருவர் சிறுமியின் தந்தையிடம் சிறுமியின் திருமணத்தை ஒரு புகழ்பெற்ற குடும்பத்தில் நிச்சயம் செய்து இருப்பதாக கூறினார்.
இதை தொடர்ந்து மணமகனின் குடும்பத்தினர் சிறுமியை ஒரு முறை பார்க்க வேண்டும் என கூறியதாக கூறினார். இதனால் அந்த சிறுமியின் தந்தை தனது மகளை சிவானா என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
ஆனால் அவர் திரும்பி வந்தபோது அவருடன் மகள் இல்லை. அவர் அவளை தனது மாமாவின் வீட்டிற்கு விட்டுவிட்டதாக கூறினார்.பின்னர் ஜூன் 26-ம் தேதி அவரது மாமா வீட்டில் இல்லை என குடும்பத்தினருக்கு தெரியவந்தது.
இது பற்றி சிறுமியின் தந்தை கூறுகையில் , அவளை சிலர் கடத்திச் சென்றதாக கூறினார்.அதன் பின்னர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.இதைத்தொடர்ந்து போலீசார் ஜூலை முதல் வாரத்தில் சிறுமியை ரூ .7 லட்சத்திற்கு விற்றுவிட்டதாக கூறி சிறுமியின் தந்தை மற்றும் மாலி, சன்வ்லா ராம் தஸ்பா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சிறுமியை கடந்த செவ்வாய் கிழமை ஹைதராபாத்தில் மீட்டனர். இரண்டு குற்றவாளிகளுடன் சிறுமியை மீட்டு உள்ளனர்.அவர்களை நாளை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக பார்மர் போலீஸ் கூறினார்.
மேலும் சிறுமி நான்கு மாத கர்ப்பிணி என சிவானா காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.