வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனுக்கு கொரோனா அறிகுறி…

Default Image

சமீபத்தில் தென்னாப்பிரிக்கா சென்று ஆஸ்திரேலிய அணி  3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடினர்.அதில் தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய அணியை ஒயிட்வாஷ் செய்தது.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியுடன் விளையாடி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விளையாட்டை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதிக்கப் படவில்லை. அதனால் ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் விளையாடி வருகின்றனர்.

இன்று துவங்கிய முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது.இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனுக்கு தொண்டை வலி காரணமாக அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என கூறி அவரை தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இதனால் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்