மைதானத்தில் இரு அணி ரசிகர்கள் மோதல்; வீடியோ வைரல்.!
ஐஎஸ்எல் 2023 போட்டியின் போது கேரளா மற்றும் கர்நாடக அணி ரசிகர்கள் மோதிக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.
இந்தியன் சூப்பர் லீக் 2023 கால்பந்து தொடரில், கேரளா ப்ளாஸ்டர்ஸ் மற்றும் பெங்களூரு எஃப்சி அணிகள் பெங்களுருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் மோதின. இந்த போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரு எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு பிறகு கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணி ரசிகர்கள் பெங்களூரு எஃப்சி ரசிகர்களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து இரு அணி ரசிகர்களும் மோதிக்கொண்டனர். ரசிகர்களின் மோதிக்கொண்ட சண்டையின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு எஃப்சி, புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது, கேரளா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தையடுத்து போட்டிக்கு பிறகு ஏற்பட்ட மோதல்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம், இரு கிளப்புகளும் துன்புறுத்தல், துஷ்பிரயோகம் மற்றும் இதுபோன்ற வன்முறைச் செயல்களை கடுமையாகக் கண்டிக்கின்றன என்று இரு கிளப் அணிகளும் தெரிவித்தன.
Hello @KeralaBlasters this is what your peaceful fan wing @kbfc_manjappada does in away matches. They come here and thrash the rival fans. It’s not the first incident. They have done this in your home too but for you they are most peaceful! #WeAreBFC pic.twitter.com/ERyL7OEHZU
— FatBatman ⚡ (@FatBatman_08) February 11, 2023