கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. அந்த போட்டிக்கு பிறகு கேப்டன் ரோஹித் சர்மா எந்த ஒரு டி20 போட்டிகளிலும் விளையாடாமல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.
அவர் டி-20 போட்டிகளில் விளையாடாத காரணத்தால் அவருக்கு பதிலாக இந்தியா விளையாடிய டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக ரோஹித் ஷர்மா டி20 போட்டிகளில் விளையாடவில்லை இதனால் அடுத்ததாக உலகக்கோப்பை 2024 போட்டியில் இந்திய அணியில் எந்த வீரர் கேப்டனாக செயல்படபோகிறார் என்பது அறிவிக்கப்படாமல் இருக்கிறது.
டி20 உலகக் கோப்பை அட்டவணை: இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி எப்போது தெரியுமா?
இந்த நிலையில், ஏற்கனவே, ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 போட்டிகளில் தாங்கள் விளையாட தயாராக இருப்பதாக பிசிசிஐயிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து நேற்று டி20 உலகக்கோப்பைக்கான அட்டவணையை அறிவித்து இருந்தது.
அப்போது வெளியான போஸ்டரில் உலகக்கோப்பையில் விளையாடும் அணி கேப்டன்களின் புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தது. அதில் இந்திய அணியின் ரோஹித் சர்மாவின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. எனவே, இதனை பார்த்த ரசிகர்கள் குழப்பத்துடன் இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையில் ரோஹித் தான் கேப்டனா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இன்னும் இதனை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், ஐசிசி வெளியிட்டுள்ள போஸ்டரில் ரோஹித் ஷர்மாவின் புகைப்படம் இடம்பெற்று இருப்பதால் அவர் டி20 உலககோப்பை போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். உண்மையில் யார் இந்திய அணியில் டி20 2024 உலகக்கோப்பை போட்டியில் கேப்டனாக செயல்பட போகிறார்கள் என்பது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…