ரிஷாப் பாண்ட் செய்த தவறால் "தோனியைத் திரும்பக் கொண்டு வாருங்கள்" ட்விட்டர்வாசிகள்..!

நேற்று நடந்த இரண்டாவது டி-20 போட்டி ராஜ்கோட்டில் உள்ள செளராஷ்டிரா மைதானத்தில் இந்திய அணியும் , பங்களாதேஷ் அணியும் விளையாடியது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் இறங்கிய பங்களாதேஷ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்தனர்.பின்னர் 154 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15.4 ஓவரில் 154 ரன்கள் எடுத்து இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பாண்ட் செய்த செயல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது.போட்டியின் போது விக்கெட் கீப்பிங் செய்யும்போது பந்து ஸ்டம்புக்கு பின்னால் வந்த பிறகுதான் ஸ்டம்பிங் செய்யவேண்டும் என்பது விதி.
#RishabhPant messes up !! ????????♂️????????♂️????????♂️ pic.twitter.com/3rEVqnNG7Z
— Nishant Barai (@barainishant) November 7, 2019
ஆனால் இப்போட்டியில் ரிஷாப் பாண்ட் சாஹல் வீசிய பந்தை லிட்டன் தாஸ் கிரீஸை விட்டு இறங்கி அடிக்க முயற்சி செய்தார்.அப்போது லிட்டன் தாஸ் பந்தை அடிக்க தவறினார். இதனால் பந்து ரிஷாப் பாண்ட் கைக்கு சென்றது.
ஆனால் ரிஷாப் பாண்ட் பந்து ஸ்டம்புக்கு வருவதற்கு முன்பே பந்தை பிடித்து அடித்து உள்ளார். டி.வி ரிப்ளேவில் ரிஷாப் பாண்ட் கையுறை ஸ்டம்புக்கு முன்னால் இருந்ததால் நோ பால் கொடுக்கப்பட்டது.
இதனால் ரசிகர்கள் கடுப்பாகினர். “தோனியைத் திரும்பக் கொண்டு வாருங்கள்” என பலர் ட்விட்டர் பதிவிட்டனர்.மேலும் ரிஷாப் பாண்ட்டை அவதூறாகப் பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025