AUSvIND: இனி பேஸ்புக்கில் கிரிக்கெட் ஹைலைட்ஸ் விடியோக்களை பார்க்கலாம்.. அட உண்மைதாங்க!
சோனி நெட்வர்க் – பேஸ்புக் இடையிலான ஒப்பந்தம் காரணமாக, ஆஸ்திரேலியா – இந்தியா இடையே நடக்கும் போட்டிகளின் ஹைலைட்ஸ் விடியோக்களை பேஸ்புக் பக்கத்தில் காணலாம்.
கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று ஒருநாள், மூன்று டி 20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி நடந்து முடிந்த நிலையில், இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அதனைதொடர்ந்து நாளை, 2 ஆம் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், இந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில், சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா, பேஸ்புக்குடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி இந்த தொடரில் நடைபெறும் அனைத்து போட்டிகளின் ஹைலைட்ஸ், சிறந்த கேட்சுகள், சிறந்த விக்கெட்டுகள் மற்றும் மேன் ஆப் தி மேட்ச் உள்ளிட்ட விடியோக்கள், பேஸ்புக் வாட்ச்-ல் (watch) வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிரிக்கெட் ரசிகர்கள், தங்களின் பேஸ்புக் மூலம் போட்டியின் ஹைலைட்ஸ் உட்பட பல விடியோக்களை காணலாம். இந்த விடீயோக்கள், சோனி ஸ்போர்ட்ஸ் இந்தியாவின் பேஸ்புக் பக்கம் மூலம் வெளியிடப்படும்.