யூரோ கோப்பை : இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ‘ஸ்பெயின்’ !

SPAIN IS EUROPEAN CHAMPION FOR A RECORD FOURTH TIME

யூரோ கோப்பை : கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த யூரோ கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஸ்பெயின் அணியும், இங்கிலாந்து அணியும் மோதியது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த போட்டியானது இன்று பெர்லினில் உள்ள ஒலிம்பியாஸ்டேடியத்தில் நடைபெற்றது.

விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியின் முதல் பாதியான 45 நிமிடத்தில் எந்த அணியும் கோல் அடிக்காமல் இருந்தனர். முதல் பாதி விறுவிறுப்பாக தொடங்கினாலும், சற்று தோய்வுடனே சென்றது. அதன்பிறகு தொடங்கிய 2-ஆம் பாதியில் 2 அணிகளும் மிக தீவிரமாக கோல் அடிக்கும் முனைப்பில் விளையாடினார்கள்.

சரியாக 47’வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் வீரரான நிகோ வில்லியம்ஸ் அசத்தல் கோல் அடித்து கோல் கணக்கை தொடங்கி வைப்பார். இதன் மூலம் ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெரும். அதனை தொடர்ந்து போட்டியின் 73’வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் வீரரான பால்மர் மிரட்டலாக சமன் கோலை அடிப்பார்.

இதன் மூலம் 1-1 என போட்டியானது சமநிலையில் சென்று கொண்டிருக்கும், போட்டியின் 86’வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் வீரரான குக்குரெல்லா அமைத்து கொடுத்த அருமையான வாய்ப்பை ஸ்பெயின் அணியின் சக வீரரான ஒயர்சபால் அசத்தலான கோலை அடிப்பார்.

இதனால் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெரும், மீதம் இருந்த 4 நிமிடங்களில்  இங்கிலாந்து அணி முயற்சி செய்தும் கோல் அடிக்க முடியாமல் போனது. இதனால், 90′ நிமிடம் முடிந்து போட்டி முடிவடையும் போது ஸ்பெயின் அணி 2-1 என போட்டியை வெற்றி பெற்றது.

இதன் காரணமாக ஸ்பெயின் யூரோ கோப்பை 2024 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றனர். மேலும், ஸ்பெயின் அணி இந்த யூரோ கோப்பை தொடரில் 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளனர். இதனால், அதிக முறை யூரோ கோப்பை வென்ற அணியாகவும் ஸ்பெயின் அணி (4-வது முறை) மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்