தொடங்கியது யூரோ கப் ..! முதல் போட்டியில் வெற்றியை பெற்ற ஜெர்மனி..!
யூரோ கப்: ஐரொப்ப கண்டங்களில் அமைந்துள்ள கால்பந்து அணிகளுக்காக நடத்தப்படும் யூரோ கப் நேற்றைய நாள் பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டிற்கான யூரோ கோப்பை தொடரில் மொத்தம் 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடவுள்ளது. 24 அணிகளும், 4 அணிகளாக, 6 பிரிவுகள் பிரிக்கப்பட்டு. அந்தந்த பிரிவுகளுக்குள் இருக்கும் அணியானது போட்டியிட்டு கொள்வார்கள். அதில் முதல் 2 இடத்தை பிடிக்கும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் . கடந்த 2021 ம் ஆண்டு நடைபெற்ற கடைசி யூரோ கோப்பையில் இத்தாலி அணி பெனால்டி மூலம் இங்கிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஜெர்மனியில் மீண்டும் தொடங்கியுள்ள இந்த யூரோ கப் தொடரின் முதல் போட்டியாக நேற்று இரவு A பிரிவில் இடம்பெற்றுள்ள ஜெர்மனி அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் முதல் 10-வது நிமிடத்தில் ஜெர்மனி அணி தங்களது முதல் கோலை அடித்து ஆதிக்கம் செலுத்தியது.
அதன் பின் 19-வது நிமித்தில் மீண்டும் ஜெர்மனி அணி தங்களது 2-வது கோலை அடித்தனர். மேலும், முதல் பாதி முடியும் பொழுது 45-வது நிமிடத்தில் சரியாக கிடைத்த பெனால்டியையும் ஜெர்மனி அணியின் ஹவேர்ட்ஸ் கோலாக மாற்றினார். இதனால், 3-0 என்ற கணக்கில் ஜெர்மனி அணி ஆதிக்கம் செலுத்தியது.
அதன்பின் 2-ஆம் பாதியில் ஆதிக்கம் செலுத்த முயற்ச்சித்த ஸ்காட்லாந்து அணி, கடினமாக முயன்றும் 1 கோலை மட்டுமே பதிவு செய்தனர். இரண்டாம் பாதியிலும் முழு முனைப்பாக விளையாடிய ஜெர்மனி மேற்கொண்டு 2 கோல்களை அடித்து 5-1 என்ற கணக்கில் ஸ்காட்லாந்து அணியை இந்த தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்ததுள்ளது.