யூரோ கோப்பை கால்பந்து ;55 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணி…..!
யூரோ கோப்பை கால்பந்து இரண்டாம் அரையிறுதியில் இங்கிலாந்து அணி டென்மார்க்கை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
லண்டனில் உள்ள வெம்ப்லி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து இரண்டாம் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் டென்மார்க் அணிகள் மோதிக்கொண்டன.
ஆட்டத்தின் 30 வது நிமிடத்தில் டென்மார்க் நட்சத்திர வீரர் மிக்கெல் டாம்ஸ்கார்ட் ஃப்ரீகிக்கில் 25 அடியிலிருந்து நேராக முதல் கோல் அடிக்க டென்மார்க் 1-0 என்ற நிலையில் முன்னிலை பெற்றது.ஆனால் 39வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் சிமன் கியா தனது அணியின் கோலுக்குள்ளேயே சேம்சைடு கோல் அடித்தார்.
இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன .பின்னர்,கேப்டன் ஹாரி கேன் கோல் அடிக்க டென்மார்க் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது.
இதனால், 1966-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு (55 ஆண்டுகளுக்கு) பிறகு முதல் முறையாக யூரோ கால்பந்து தொடரில் இறுதி போட்டிக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.இதனால்,இங்கிலாந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.
இதனால்,ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள யூரோ 2020 இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் இத்தாலியை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர்.
இதற்கிடையில், கப் இஸ் கம்மிங் சூன்(cup is coming soon) என்ற இங்கிலாந்து ரசிகர்களின் கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஏனெனில்,கால்பந்து போட்டியை கண்டுபிடித்தது இங்கிலாந்து என்பது குறிப்பிடத்தக்கது.
???? COMING SOON: “THE UNDISPUTED CHAMPIONS OF EUROPE” by Steven Scragg is a trilogy-ending homage to the golden era of the European Cup. These are the stories and glories of football’s highest achievers. #ComingSoon ⚽️???????? Visit ➡️ https://t.co/zPwdEUBBlJ pic.twitter.com/NwvuOWErZQ
— My Football Books (@myfootballbooks) July 3, 2021