E பிரிவில் நடைபெற்ற ஸ்வீடன் மற்றும் ஸ்லோவாகியா அணிகளுக்கிடையிலான போட்டியில் 1-0 என்ற கோல்கள் கணக்கில் ஸ்வீடன் வெற்றிபெற்றது.
யூரோ கோப்பைத் தொடரில் சூப்பர் சிக்ஸ்டீன் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணியும் போராடி வருகின்றனர். E பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஸ்வீடன் மற்றும் ஸ்லோவாகியா அணிகள் மோதினர். ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை, பின்னர் இரண்டாம் பாதியில் 77-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஸ்வீடன் அணி கோலாக மாற்றினார்.
அதன் பின்னர் ஸ்லோவாகியா அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தையும் தோல்வியில் முடிந்தன. இதனால், இப்போட்டியில், 1-0 என்ற கோல்கள் கணக்கில் ஸ்வீடன் வெற்றிபெற்றது. D போட்டி பிரிவில் இடம் பெற்றுள்ள குரோஷியா அணியும், செக் குடியரசு அணியும் மோதியது. இரு அணிகளும் ஆட்டம் முதலே அதிரடியாக விளையாடினர்.
35 நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை செக் குடியரசு அணி கோலாக மாற்றினர். பின்னர் இரண்டாம் பாதி தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே குரோஷியா அணி என ஒரு கோல் அடித்தனர். பின்னர், இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
நள்ளிரவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் D பிரிவில் உள்ள இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதியது. இரு அணி வீரர்களும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால், போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…