யூரோ கோப்பைக் கால்பந்து போட்டியில் இருந்து போர்ச்சுகல் அணி வெளியேறியது.
ஸ்பெயின்,செவில்லில் 2020 ஆம் ஆண்டின் யூரோ கோப்பைக் கால்பந்து இறுதி-16 அணிகளுக்கான நாக் அவுட் சுற்றுப் போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது.
முதல் பாதியில் ரொனால்டோ ஒரு பரபரப்பான ஃப்ரீ கிக் எடுத்தார்,ஆனால் அது பெல்ஜியம் கோல்கீப்பர் திபாட் கோர்டோயிஸின் டைவ் மூலம் காப்பாற்றப்பட்டது.போட்டியை சமன் செய்ய போர்ச்சுகல் அணிக்கு பல நல்ல வாய்ப்புகள் இருந்தன,ஆனால் அதை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.காரணம்,பெல்ஜியம் வீரர் தோர்கன் ஹசார்டு,கடைசி 42வது நிமிடத்தில் அடித்த கோல்தான் பெல்ஜியத்தின் வெற்றி கோலாக அமைந்தது.
இந்நிலையில்,ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுகல் அணியை பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.எனவே,போட்டியில் இருந்து போர்ச்சுகல் அணி வெளியேறியது.
இதனால்,ரொனால்டோ 110 கோல்கள் அடித்து அதிக கோல்களுக்கான உலக சாதனையை நிகழ்த்த முடியாமல் போனது.மேலும்,ரொனால்டோ ஆடும் கடைசி ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியாக இது கருதப்படுகிறது. இதன்காரணமாக,ரொனால்டோவின் அதிக கோல் கனவு கலைந்தது.
இதனையடுத்து,பெல்ஜியம் காலிறுதிக்கு முன்னேறி,இத்தாலியை எதிர்கொள்ள உள்ளது.முன்னதாக,இத்தாலி அணி ஆஸ்திரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…