யூரோ 2020 : 1-0 என்ற கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது பின்லாந்து!
நேற்று யூரோ கால்பந்து தொடர் நடைபெற்று கொண்டிருக்கையிலேயே டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் மைதானத்தில் மயங்கி விழுந்தார். அதன் பின் நடைபெற்ற ஆட்டத்தில் பின்லாந்து 1-0 என்ற கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது.
போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரமாகிய லிஸ்பனில் ஜூன் 11 ஆம் தேதி நள்ளிரவு யூரோ கோப்பை கால்பந்து 2020 தொடங்கியது. இந்த யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய இரு அணிகள் மோதியது. ஆட்டம் தொடங்கிய முதல் பகுதியில் டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். அதன் பின்பு அவருக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்த பின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் எரிக்சன் கண் விழித்து விட்டதாகவும் மேலும் அவர் சில பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் டேனிஷ் கால்பந்து யூனியன் டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டரை மணி நேரத்திற்கு பின்பதாக மீண்டும் இந்த ஆட்டம் தொடங்கியது. அப்பொழுது பின்லாந்து வீரர் ஜோயல் 59வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்துள்ளார். இதன் மூலமாக டென்மார்க் அணியை பின்லாந்து அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.