ENGvsAUS : ‘நேர்மையா விளையாடுங்க’…ஆஸ்திரேலிய வீரரை விளாசிய ரசிகர்கள்!

நேற்று நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியிடம் மிகப்பெரிய தோல்வியைப் பதிவு செய்துள்ளது.

ENG vs AUS 4th ODI

லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே 4-வது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து மிக எளிதாக வெற்றி பெற்றது. ஆனால் போட்டியின் போது நடந்த ஒரு விஷயம் சர்ச்சையாக வெடித்துள்ளது. அது என்னவென்றால், இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸின் 17-வது ஓவரை மிட்செல் ஸ்டார்க் பந்து வீச வந்தார்.

அவர் வீசிய பந்தை இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹாரி புரூக் எதிர்கொண்டார். அப்போது அவர் எதிர்கொண்ட அந்த பந்தானது எட்ஜ் ஆகி கீப்பர் ஜோஷ் இங்கிலிஸ்க்கு கேட்சாக சென்றது. அந்த கேட்ச் சரியாகப் பிடித்திருந்தால், பிரச்சினை வந்திருக்காது. ஆனால், பந்து தரையைத் தொட்ட பிறகு தான் கேட்ச் பிடித்தார். இதைத் தொலைவிலிருந்து பார்த்தால் கேட்ச் போன்றே தெரியும். ஆனால், இதனைக் கவனிக்காமல் நடுவரும் கைகளை உயர்த்தி அவுட் கொடுத்தார்.

பின் ஆஸ்ரேலியா வீரர்கள் விக்கெட் எடுத்த சந்தோசத்தில் கொண்டாடினார்கள். ஆனால், மைதானத்திலிருந்த ரசிகர்கள் ‘அவுட் இல்லை -அவுட் இல்லை’, எனக் கூறி கோஷமிட்டனர். களத்தில் குழப்பத்திலிருந்த ஹாரி புரூக் ரிவியூ எடுத்தார். அந்த ரீவ்யூவில் எட்ஜான அந்த பந்து ஜோஷ் பிடிப்பதற்கு ஒரு சில நொடிகளுக்கு முன் தரையில் பிட்ச் ஆகியிருக்கும். அதனால், நடுவரும் அவர் கொடுத்த அவுட் என்ற முடிவிலிருந்து பின்வாங்கினார்.

இருப்பினும், சமூக வலைத்தளங்களில் கீப்பர் உங்களுக்கு கேட்ச் பிடித்தது பந்து தரையில் பட்டது தெரியாதா? எனவும் ‘உண்மையாகவும் நேர்மையாகவும் விளையாடுங்கள்’ எனவும் ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பராக ஜோஷ் இங்லீஷை கேள்விகள் எழுப்பியும் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

மேலும், நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணியை எளிதில் வெற்றி பெற்று 5 போட்டிகள் அடங்கிய தொடரை 2-2 எனச் சமன் செய்துள்ளது. இந்த தொடரின் கடைசி போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்