வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!
இன்று நடைபெற்ற டி20 உலககோப்பைத் தொடரின் 6-வது போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி,பேட்டிங் கிளமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி தொடக்கத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால், துரதிஷ்டவசமாக தொடக்க வீராங்கனையான பௌச்சியர் 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய எந்த ஒரு வீரரும் நிலைத்து விளையாடாமல் சொற்பரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.
ஆனால், மறுமுனையில் மற்றொரு தொடக்க வீராங்கனையான வியாட்-ஹாட்ஜ் நிதானமாக விளையாடி அணிக்காக ரன்களைச் சேர்த்தார். இறுதிவரை தட்டி தட்டியே ரன்களை எடுத்தார். இதனால், இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இங்கிலாந்து அணியில் தனியாக நின்று ரன்களைச் சேர்த்த தொடக்க வீராங்கனையான வியாட்-ஹாட்ஜ் 40 பந்துக்கு 41 ரன்கள் எடுத்திருந்தார். சிறப்பாக பந்து வீசிய வங்கதேச மகளிர் அணியில் நகிதா அக்தர், ஃபஹிமா காதுன் மற்றும் ரிது மோனி ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது வங்கதேச மகளிர் அணி. தொடக்கத்தை சரியாக அமைக்காமல் சொற்ப ரன்களுக்கு தொடக்க வீராங்கனைகள் ஆட்டமிருந்து வெளியேறினார்கள். இருவரைத் தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சோபனா மோஸ்தரி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி தட்டி தட்டி ரன்களை சேர்த்தார்.
அவருடன் உறுதுணையாக மற்றொரு முனையில் நிகர் சுல்தானா கைக்கொடுத்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அவரும் 15 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார்.
அதன்பின் அடுத்தடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் யாரும் சரிவர விளையாடாமல் போனதால் மறுமுனையில் தனி ஒரு வீராங்கனையாக போராடிக் கொண்டிருந்த சோபனா மோஸ்தரிக்கு அழுத்தம் எகிறியது.
மேலும், விறுவிறுப்பாக சென்ற ஆட்டம் போக போக இங்கிலாந்து மகளிர் அணியின் பக்கம் சாயத் தொடங்கியது. அதே நேரம் மீதம் இருக்கின்ற பந்து குறையத் தொடங்கியது, ஆனால் ரன்கள் குறையாமல் இருந்தது.
இதனால், இறுதி வரை விளையாடிய வங்கதேச மகளிர் அணியால் 20 ஓவருக்கு விக்கெட்டுக்கு 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து மகளிர் அணியின் வீராங்கனையான லின்சி ஸ்மித் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார்.
இதனால், இங்கிலாந்து மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்த தொடரின் முதல் வெற்றியை ருசித்தது. மேலும், கடந்த முதல் போட்டியில் ஸ்காட்லாந்து மகளிர் அணியை வென்றிருந்த வங்கதேச மகளிர் அணியால் இங்கிலாந்து மகளிர் அணியை வெற்றி பெற முடியவில்லை. இதனால், ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் வங்கதேச மகளிர் அணி அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.