கடைசி நிமித்தத்தில் வெற்றியை உறுதி செய்த இங்கிலாந்து ..! இறுதி போட்டிக்கு தகுதி பெற்று அபாரம்!

Netherland vs England, Semi Final 2 , Euro Cup 2024

யூரோ கோப்பை : நடைபெற்ற யூரோ கோப்பை தொடரின் 2-வது அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

யூரோ கோப்பை தொடரின் 2-ஆம் அரை இறுதி போட்டியானது இன்று அதிகாலை நடைபெற்றது, மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிறைந்த இந்த போட்டி விறுவிறுப்பாகவே தொடங்கியது. அதற்கு ஏற்ப சரியாக போட்டியின் 7’வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான சகா இங்கிலாந்து அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார்.

மேலும், இங்கிலாந்து அணி அந்த முன்னிலை கோலால் ஆதிக்கம் செலுத்தி வந்தது, அதன்பின் ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியினர் செய்த தவறால் இங்கிலாந்து அணிக்கு ஒரு பெனால்டி சூட் கிடைக்கும், அதனை அறிய வாய்ப்பாக எடுத்த இங்கிலாந்து அணியின் கேன் அருமையாக கோலை அடித்து அசத்துவார். இதனால், போட்டி 1-1 என சமநிலைக்கு மாறிவிடும்.

மேற்கொண்டு விளையாடிய 2 அணிகளும் கடுமையாக போராடியும் முதல் பாதியில் கோல் அடிக்க முடியாமல் தடுமாறினார்கள். அதனை தொடர்ந்து போட்டியின் இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் இரண்டு அணிகளும், கிடைத்த ஒரு சில கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். யூரோ கோப்பையின் அரை இறுதி போட்டி என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது என்றே கூறலாம்.

இதனால், 90′ நிமிடங்கள் ஆகியும் இரண்டு அணிகளும் கோல் அடிக்காமல் விளையாடியதால், போட்டி கண்டிப்பாக பெனால்டி சூட் வரை செல்லும் என ரசிகர்களால் எதிர்பார்த்து கொண்டிருந்த சமயத்தில் 90’நிமிடத்தில் கூடுதலாக கொடுக்கப்பட்ட 5′ நிமிடத்தில், அதாவது 90’+1 நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் வாட்கின்ஸ் அபாரமாக கோலை அடித்து அசத்தினார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 2-1 என வெற்றியை உறுதி செய்தது.

மேலும், 4 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த யூரோ கோப்பை தொடரில் தொடர்ந்து 2-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. கடந்த 2020-ல் நடைபெற்ற யூரோ கோப்பை தொடரில் இங்கிலாந்து இறுதி போட்டி வரை சென்று இத்தாலியிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்