மக்காவ் டென்னிஸ் மாஸ்டரில் இருந்து விலகிய எம்மா ரடுகானு.!

முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியனான டென்னிஸ் வீராங்கனை எம்மா ரடுகானு(21) மே மாதம் மணிக்கட்டு மற்றும் கணுக்கால் அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல் முறையாக ஆகஸ்ட் மாதத்தில் தனது பயிற்சியைத் தொடங்கினார்.  இதைத்தொடர்ந்து, நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் மற்றும் யு.எஸ் ஓபனைத் தொடரில் அவர் விளையாடவில்லை. இதனால் உலக தரவரிசையில் 289 வது இடத்திற்கு சரிந்தார்.

இந்நிலையில், அறுவை சிகிச்சையில் இருந்து குணமடைந்து வரும் நிலையில் டிசம்பர் 2-3 தேதிகளில் சீனாவில் நடைபெறவிருந்த மக்காவ் டென்னிஸ் மாஸ்டர்ஸில் இருந்து எம்மா ரடுகானு விலகியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்