INDvsSA:சதம் விளாசிய எல்கர், குவின்டன் டி காக்..! 385 ரன் குவித்த தென்னாப்பிரிக்கா..!
இந்தியா , தென்ஆப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் இறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழந்து 502 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக ரோகித் 176 ரன்னும் , மயங்க் அகர்வால் 215 ரன்கள் அடித்தனர்.
இதை தொடர்ந்து நேற்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது. இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய தென்னாபிரிக்க அணி ஆட்டம் தொடங்கிய சில நேரத்தில் பவுமா 18 ரன்களுடன் வெளியேறினார்.
இதையடுத்து கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் , தொடக்க வீரர் எல்கர் இருவரும் நிதானமாக ஆடி அணியின் எண்ணிக்கை உயர்த்தினார். சிறப்பாக விளையாடிய டு பிளெஸ்ஸிஸ் அரைசதம் அடித்து 55 வெளியேறினார்.பின்னர் குவின்டன் டி காக் மற்றும் எல்கர் ஓன்று சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
நிதானமாக சிறப்பாக விளையாடிய எல்கர் 287 பந்திற்கு 160 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.பிறகு விளையாடிய குவின்டன் டி காக் பொறுமையான ஆட்டத்தால் 111 அடித்தார். இதனால் இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட்டை இழந்து 385 ரன்கள் குவித்தனர். இந்திய அணியில் அஸ்வின் 5 விக்கெட்டை பறித்தார். நாளை நான்காம் நாள் ஆட்டம் தொடங்க உள்ளது.