விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் சாம்பியன்ஷிப்பை வென்றார் எலினா !
23 வயதான கஜகஸ்தானின் எலினா ரைபாகினா விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் சாம்பியன்ஷிப்பை வென்றார்.
சனிக்கிழமை நடைபெற்ற விம்பிள்டன் இறுதிப் போட்டியில் எலினா ரைபாகினா 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஒன்ஸ் ஜபீர்-ஐ தோற்கடித்து கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் சாம்பியன்ஷிப்பை வென்ற கஜகஸ்தானின் முதல் டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ரைபகினா 23 வயதான மாஸ்கோவில் பிறந்தவர் மற்றும் 2018 ஆம் ஆண்டு முதல் கஜகஸ்தானுக்கு க்காக விளையாடி வருகிறார்.
கஜகஸ்தான் ரைபகினாவின் டென்னிஸ் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல நிதியுதவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.