“எங்கு தொடங்கும் எங்கு முடியும்”…கடைசி போட்டியில் கண்கலங்கிய டுவைன் பிராவோ!!
அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த டுவைன் பிராவோ நேற்று கடைசி போட்டியில் விளையாடியபோது கண்கலங்கி அழுதார்.
சென்னை : வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர் டுவைன் பிராவோ. தன்னுடைய விளையாட்டால் மட்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்தாமல், மைதானத்தில் நடனம் மற்றும் சில குறும்புத்தனமான செயல்களைச் செய்தும் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
இதுவரை, ரசிகர்களை விளையாட்டால் மகிழ்வித்த டுவைன் பிராவோ இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியைக் கொடுத்திருந்தார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி ரசிகர்கள் மற்றும், சென்னை அணி ரசிகர்கள் அனைவரும் சோகத்திலிருந்தார்கள்.
ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக அவர் விளையாடி வந்த நிலையில், அவர் ஓய்வு பெற்றாலும், சென்னை அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைத்துக்கொண்டு அணியோடு பயணித்து வருகிறார். அதே சமயம், கரிபியன் லீக் தொடரில் மட்டும் விளையாடி வந்த நிலையில், அதிலிருந்தும் தான் ஓய்வு பெறுவதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். நடைபெற்று வரும் தொடரில் மட்டும் விளையாடுவேன்.
அதற்கு அடுத்ததாக ஓய்வு பெறுகிறேன் என அறிவித்தார். இதனையடுத்து, நேற்று அவர் தன்னுடைய கடைசி டி 20 போட்டியை விளையாடினார்.அவருடைய கடைசி போட்டி என்பதால் அவருடைய விளையாட்டைப் பார்த்து ரசிகர்கள் ஆனந்தத்துடன் கலந்த சோகத்தில் ரசித்துக்கொண்டு இருந்தார்கள்.
போட்டி முடிந்த பிறகு இது தான் நம்மளுடைய கடைசி போட்டி இனிமேல் விளையாடமாட்டோம் என நினைத்துக்கொண்டு எமோஷனலை கட்டுப்படுத்தி வீரர்களுக்குக் கைகொடுத்துக்கொண்டிருந்த நிலையில், எமோஷனலை கட்டுப்படுத்த முடியாமல் டுவைன் பிராவோ மைதானத்தில் தேம்பித் தேம்பி அழுதார்.
அவர் அழுததைப் பார்த்த ரசிகர்களும் கைகளைத் தட்டி அவரை மரியாதையுடன் வழி அனுப்பி வைத்தனர். போட்டி முடிந்த பிறகு எமோஷனலாகவும் டுவைன் பிராவோ பேசியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர் ” எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த விளையாட்டுக்கு நான் விடைபெறும் நாள் இன்று. ஐந்து வயதிலிருந்தே, கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன்.
எனக்கும் என் குடும்பத்திற்கும் நான் கனவு கண்ட வாழ்க்கையை எனக்குக் கொடுத்தது கிரிக்கெட் தான். அதற்காக, நான் உங்களுக்கு போதுமான நன்றி சொல்ல முடியாது. எனக்கு இன்னும் கிரிக்கெட் விளையாட ஆர்வம் இருக்கிறது. ஆனால், அதற்கான உடற்தகுதி என்னிடம் இல்லை. எனவே, விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்” என எமோஷனலாக பேசியுள்ளார்.
An end of an era 😢 Thank you Champion 🏆 #CPL24 #CricketPlayedLouder #BiggestPartyInSport pic.twitter.com/FZlSukhSUL
— CPL T20 (@CPL) September 27, 2024