தொடங்கியது துலீப் டிராபி ! வெற்றியை குறிவைக்கும் 4 அணிகள்!
இந்திய உள்ளூர் தொடரான துலீப் டிராஃபி தொடர் பெறும் எதிர்பார்ப்புகளுடன் இன்று தொடங்கி இருக்கிறது.
சென்னை : இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடர்களில் பெரும் எதிர்பார்ப்புகள் நிறைந்த தொடர் தான் துலீப் ட்ராபி. எப்போதும் இல்லாமல் இந்த வருடம் இந்த தொடருக்கு சற்று எதிர்பார்ப்பு கூடுதல் என்றே கூறலாம்.
அதற்கு காரணம் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் இதில் கலந்து கொண்டு விளையாடிகிறார்கள். மேலும், இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தான் நடைபெற இருக்கும் வங்கதேச டெஸ்ட் தொடருக்கும் தேர்வாவர்கள் என பிசிசிஐ அறிவித்திருந்தது.
அதனால், இந்த தொடர் மீது இந்திய அணியின் ரசிகர்களுக்கு ஒரு தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சமீபத்தில் இந்த தொடரின் முதல் சுற்றுக்கான 4 அணிகளை பிசிசிஐ அறிவித்திருந்தது.
இந்த 4 அணிகளும் மாறி மாறி மோதிக் கொள்வார்கள். அதன்படி இன்றைய நாள், 2 போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில், இந்தியா A மற்றும் இந்தியா-B அணிகள் ஒரு போட்டியிலும், இந்தியா-C மற்றும் இந்தியா -D அணிகள் ஒரு போட்டியிலும் விளையாடி வருகிறது.
இந்தியா-A vs இந்தியா-B
கில் தலைமையிலான இந்தியா-A அணியும், அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா-B அணியும் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற கில் (இந்தியா-A) முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. அதன்படி, 7 ஓவர்கள் முடிவில் இந்தியா-B அணி விக்கெட்டுகள் இழக்காமல் 24 ரன்களுடன் விளையாடி வருகிறது.
அணியில் இடம் பெற்ற 11 வீரர்கள் :-
இந்தியா-A :
ஷுப்மன் கில் (கேப்டன்), மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், ரியான் பராக், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, தனுஷ் கோட்டியான், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், அவேஷ் கான், கலீல் அகமது
இந்தியா-B :
அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), முஷீர் கான், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகேஷ் குமார், நவ்தீப் சைனி, யாஷ் தயாள்.
இந்தியா-C vs இந்தியா-D :
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா-C அணியும் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்தியா-D அணியும் மற்றொரு போட்டியில் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற ருதுராஜ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. அதன்படி, பேட்டிங் செய்து வரும் இந்தியா-D அணி 6 ஓவர்கள் முடிவில் 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
அணியில் இடம் பெற்ற 11 வீரர்கள் :
இந்தியா-C :
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சாய் சுதர்சன், ரஜத் படிதார், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), பாபா இந்திரஜித், ஆர்யன் ஜூயல், ஹிருத்திக் ஷோக்கீன், விஜய்குமார் வைஷாக், மானவ் சுதர், அன்ஷுல் கம்போஜ், ஹிமான்ஷு சவுகான்.
இந்தியா-D :
தேவ்தத் படிக்கல், யாஷ் துபே, ரிக்கி புய், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஸ்ரீகர் பாரத், அதர்வ டைடே (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், சரண்ஷ் ஜெயின், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஆதித்யா தாகரே.